திருத்தேவூர்

இறைவர் : தேவகுறுநாதர், புரீஸ்வரர்
இறைவி : மதுரபாஷணி, தேன்மொழியாள்

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வாழை

கோயில் சிறிது. கட்டுமலைமேல் இருக்கிறது. மாடக்கோயில். ஏறுவதற்கு 21 படிகள் உண்டு. கௌதமர் பூசித்த இலிங்கம் கட்டுமலைமேல் இருக்கிறது. இடப வாகனம் அழகாக அமைந்துள்ளது.

நாகபட்டினத்தின் அருகே உள்ள கீழ்வேளூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 3 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 85