திருவக்கரை

இறைவர் : சந்திரசேகரர்
இறைவி : வடிவாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சந்திரபிரம தீர்த்தம்

பெரிய கோயில். இறைவர் 3 முகங்களோடு விளங்குகிறார். வக்கிராசுரம் பூசித்த இலிங்கம் கோயிலினுள் எழுந்தருளியுள்ளார். காளியின் உருவம் தென்பாலுள்ளது. நந்தி மிகப்பெரியது. குண்டலமுனிவர் திருவுருவம் வடக்கு சுற்றிலுள்ளது. அம்பலவாணர் இங்கு (மதுரையில் போல) இடக்காலை ஊன்றி வலக்காலை தூக்கிய திருவடியாகக் கொண்டு நடனமாடுகிறார்.

விழுப்புரம்-சென்னை இருப்புப்பாதையில் புறவார் பனங்காட்டூர் வழியாக செல்லலாம். திண்டிவனம்-புதுச்சேரி வழியில் மானூர் 18 கி.மீ. பேருந்து பயண வசதிகள் உண்டு. மானூரிலிருந்து திருவக்கரை 3 கி.மீ. கால் நடையாகச் செல்லலாம்.

தொண்டைநாடு : 30