திருக்குடந்தைக்காரோணம்

இறைவர் : சோமநாதர், காசிவிசுவநாதர்
இறைவி : காசிவிசாலாட்சி தேவி, தேனார் மொழியாள்

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : காசிபதி. இது மாமகக் குளத்துக்கு வடக்கில் இருக்கிறது
தலமரம் : வேம்பு

சிறிய கோயில். இது காசிவிசுவநாதர் கோயில் எனவும் வழங்கப்படுகிறது. மேற்கு பார்த்த சந்நிதி. நவகன்னிகையர்க்கு தனிக்கோயில் உண்டு. கங்கை, யமுனை, நர்பதை, சர்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்திரை, கிருஷ்ணை, சரயு இவர்களை சிவபெருமான் குடந்தையில் உள்ள மகாமக குளத்துக்கு, புனித நீராட அழைத்துச் சென்ற காட்சி வளைவில் சிவாரூபத்தில் உண்டு. இக்கோயில் மகாமகக் குளத்தின் வடகரைக் கீழ்ப் பக்கத்தில் இருக்கிறது.

ரயில், பேருந்து பயண வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 28