திருக்களர்

இறைவர் : களர்முனைநாதர்
இறைவி : இளங்கொம்பன்னாள், அழகேசுவரியம்மை (வலம்புரி விநாயகர்)

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : தூர்வாசம்

கோயிலும், கோபுரமும் பெரியன. கோபுரம் எழில் மிக்கது. துருவாச முனிவருக்கு நடேசப்பெருமான் நடன தரிசனம் தந்த தலம். அவருடைய திருமேனி நடேசப்பிரான் சந்நிதியில் உள்ளது. இத்தலத்துக்கு பாரிஜானவனம் என்றும் பெயர் உண்டு.

திருத்துறைப்பூண்டி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 13 கி.மீ. பேருந்துப் பயண வசதிகளும் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 105