திருக்கற்குடி (உய்யக்கொண்டான்மலை)

இறைவர் : உய்யக்கொண்டநாதர், உஜ்ஜீவநாதர்
இறைவி : அஞ்சனாட்சி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3

சிறிய கோயில். மலை அடிவாரத்தில் இருந்து கோயிலை அடைய 200 படிகள் ஏறவேண்டும். இராசகோபுரம் இல்லை. முசிலிம்களின் படையெடுப்பின்போது, அவர்களின் கொடுஞ் செயலால் பின்னப்பட்ட அம்பாள் பாலாம்பிகை கிழக்கு நோக்கிய கோயிலில் உள்ளார். உஜ்ஜீவநாத சுவாமி கோயிலும், அம்மை அஞ்சனாட்சி தேவி கோயிலும் ஆகிய இரண்டும் மேற்கு பார்த்தபடி உள்ளன. திருத்தருமபுர அருளாட்சி உள்ளது.

திருச்சியில் இருந்து முருகன் தலமாகிய வயலூருக்கும் செல்லும் சாலையில் 4 கி.மீ. பேருந்துப் பயண வசதிகள் மிக உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 53