திருமாணிகுழி

இறைவர் : மாணிக்கவரதர்
இறைவி : மாணிக்கவல்லி

பதிகம் : சம்பந்தர் 1

வாமனனாகிய பிரமசாரி பூசித்த தலம். உத்தம குணங்கள் உடையமையானும், சிவபக்தனும் ஆகிய மாவலியை, யாதொரு குற்றமும் இன்றியே, தேவர்கள் வேண்டுகோளுக்காக வஞ்சித்து, அழித்தமையால் உண்டாய பழியைப் போக்கிக்கொள்ள திருமால் சிவபெருமானை வழிபட்ட தலம். கெடில நதியின் கீழ்க் கரையில் உள்ளது. இறைவன் திருமுன் எப்போதும் திரையிடப் பட்டிருக்கும். அத்திரையில் வரையப் பட்டுள்ள உருத்திர வடிவத்துக்கு முதலில் பூசை, பின்பு திரையை நீக்கி, சுவாமிக்கு வழிபாடு செய்யப்படும்.

திருப்பாதிரிப்புலியூரில் (கடலூர் புது நகரம்) இருந்து மேற்கே 5-10 கி.மீ. நெல்லிக்குப்பம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்தும் வரலாம். பயண வசதி உண்டு.

நடுநாடு : 17