திருக்கச்சித்திருமேற்றளி

இறைவர் : திருமேற்றளி நாதர்
இறைவி : காமாட்சி

பதிகம் : அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 2
தீர்த்தம் : பெருமாள் தீர்த்தம்

கோயில் சிறிது. 3 நிலை இராச கோபுரம். கச்சியீசர் சந்நிதி மேற்கு பார்த்தபடி. திருமால் சிவசாரூபம் பெற விரும்பியபோது, சிவபெருமான், அவரை சம்பந்தர் பதிகங்களைப் படிக்கும்படி அருளினார். அவ்வண்ணமே செய்த திருமால் சிவசாரூபம் பெற்றனர். இங்ஙனம் திருமால் சிவசாரூபம் பெற்ற சன்னிதியே “ஓதவுருகீசர்” எனப்படுகிறது. மற்றொரு கோயில் மேற்கு பார்த்த சந்நிதியோடு உண்டு. இதற்கு சம்பந்தர் கோயில் என்றும் பெயர் உண்டு. சம்பந்தர் காஞ்சிக்கு முதன்முதல் வந்தபோது, அங்குதான் சென்றார் என்பர். இதற்கு மேற்கில் சம்பந்தர் பதிகங்களை பக்தியுடன் செவிமடுத்த முத்தீசர் கோயில் இருக்கிறது.

தொண்டைநாடு : 2