திருப்பராய்த்துறை

இறைவர் : பராய்த்துறை நாதர்
இறைவி : பசும்பொன் மயிலம்மை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : அகண்ட காவிரி
தலமரம் : பராய் மரம்

கோயில் பெரிது. 7 நிலை இராச கோபுரம். அடுத்து உள்ளே 5 நிலையில் ஒரு கோபுரம் உண்டு. அம்பாள் கோயில் சிறிது. சுவாமி சந்நிதியில் தக்ஷிணாமூர்த்தி மண்டபம். நகரத்தார் திர்ப்பணி. செப்பமாக உள்ளது. புகழ் பூத்த ஸ்ரீசுவாமி சித்பவானந்தர் நிறுவிய ஸ்ரீராமகிருஷ்ண தபோவனமும், தர்மச்சக்கர சஞ்சிகையின் அச்சுக்கூடம், அலுவலகங்களும், பெரிய அளவில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட சுவாமி சித்பவானந்தர் நினைவு அந்தர்யோக மண்டபமும், பிறவும் உண்டு. ஸ்ரீராமகிருஷ்ண குடில் என்ற வேறு நிறுவனமும் அருகே உண்டு.

திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள எலமனூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கி.மீ தொலைவு. ரயில், பேருந்து பயண வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 3