திருவாளொளிப்புத்தூர் (இரத்தினபுரீஸ்வரி சுவாமி தேவஸ்தானம்)

இறைவர் : மாணிக்கவண்ணர்
இறைவி : வண்டார்குழலி

பதிகம் : சம்பந்தர் 2 + சுந்தரர் 1 = ஆக 3
தலமரம் : வாகை

பெரிய கோயில். கோயிலுக்கு முன்னாள் பெரிய திருக்குளம். துர்க்கையம்மன் சந்நிதி சிறப்பு. இறைவன் அர்ச்சுனனின் வாளை ஒளித்து வைத்த தலம் ஆதலின், வாள் + ஒளி + புத்தூர் = வாளொளிபுத்தூர் எனப்பட்டது. வாசுகி பூசித்து, இறைவனுக்கு அணியாயிற்று. திருமால் மாணிக்கத்தை வைத்துப் பூசித்தமையால் அரதனபுரம் என்று அழைப்பர்.

வைதீஸ்வரன் கோயிலுக்கு மேற்கே, திருப்புன்கூர் வழியாக, கும்பகோணம் செல்லும் வழியில் 8 கி.மீ. பயண வசதிகள் மிக உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 29