திருப்பனந்தாள்

இறைவர் : நெஞ்சடையப்பன், அருணஜடேஸ்வரர்
இறைவி : பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : பனை
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் (விநா : ஆண்டவிநாயகர்) மண்ணியாறு

பெரிய கோயிலும், கோபுரங்களும். மேற்கு பார்த்த இறைவர். தடாகை என்னும் ஒரு பெண் அடியார்க்காக சிவலிங்கம் சாய்ந்து கொடுத்த தலம். அதனை நிமிர்த்தி வழிபடவேண்டும் என்று பல வழிகளிலும் முயன்ற அரசனுக்கு அது கைகூடாமல் போகவே கவலை கொண்டான். அவன் கவலையை நீக்க, குங்கிலியக்கலய நாயனார் (பெ.பு) விரும்பி முயன்று சிவலிங்கத்தை நிமிர்த்தருளிய தலம். இதனால் இதற்கு தாடகேச்சரம் என்றும் பெயருண்டு. இது மண்ணியாற்றங் கரையில் உள்ளது. திருஆப்பாடி தென்-மேற்கே 2 கி.மீ. தூரத்திலும், திருச்சேய்ஞ்ஞலூர் தென்-கிழக்கில் 2 கி.மீ. தூரத்திலும் உள்ளன. ஆதிகுமரகுருபர சுவாமிகள் காசியிலிருந்து இங்கு வந்து தம் குருநாதர் தருமபுரம் ஆதீன பண்டாரச் சந்நிதிகள் மாசிலாமணி தேசிகர் அருள் ஆணையின் வண்ணம் அமைத்த ஸ்ரீ காசிமடம், தாடகேசுவரம் என்ற கோயிலோடு இணைந்திருக்கிறது. திருச்சுற்றில் கிழக்கே 2 பனைமரங்கள் உண்டு. ஆதலின் திருப்பனந்தாள் எனவும் பெயர் பெற்றது.

பயண வசதிகள் உண்டு. ஆடுதுறை இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 16 கி.மீ. தூரம். வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்தும், மயிலாடுதுறையில் இருந்தும் பட்டவர்த்தி வழியாக பேருந்தில் செல்லலாம். கோயில் வாயிலில் இறங்கலாம்.

சோழநாடு, காவிரி வடகரை : 39