திருவியலூர் (பண்டாரவாடைத் திருவியலூர்)

இறைவர் : யோகர்நந்தர், ஏகாந்தநாதேசுவரர்
இறைவி : சாந்தநாயகி, சௌந்தரநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சடாயு தீர்த்தம்

சிறிய கோயில். நான்முகனின் மகன் விஷ்ணு சர்மாதன், உடன் பிறந்த எழுவருடன், சிவராத்திரி தினத்தன்று, சிவலிங்க மூர்த்திக்குள் இரண்டறக் கலந்த புண்ணியத் தலம். அவ் எண்மருடைய தலைமுடிகள் இன்றும் சிவலிங்கத்தின் தலையில் காணத் தக்கன. சிவராத்திரி தோறும் அகத்திய முனிவர், இங்கு எழுந்தருளி, நியமப்படி பூசனை செய்வதாக ஐதீகம். இவ்வூரில் பிறந்து, வளர்ந்த உய்யவந்ததேவ நாயனார் திருவுந்தியாரை இயற்றியவர். அவர் மாணாக்கர் ஆகிய திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் 1178-இல் திருக்களிற்றுப்படியாரை அருளிச் செய்தவர்.

கும்பகோணத்துக்கு கிழக்கே 7 கி.மீ. பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 43