திருப்பழையாறை, வடதளி

இறைவர் : சோமேசர்
இறைவி : சோமகலாநாயகி

வடதளியில் இறைவர் : தர்மபுரீசர்
இறைவி : விமலநாயகி

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : சோமதீர்த்தம்

இங்கே இரண்டு (ஊர்கள்) கோயில்கள் இருக்கின்றன. (1) பழையாறை (2) வடதளி. இரண்டையும் சேர்த்தே பாசுரங்கள் பாடப்பட்டுள்ளன. வடதளி கட்டுமலைமேல் இருக்கிறது. இங்குள்ள இறைவரை சமணர்கள் மறைத்திருந்தனர். அப்போது நாவுக்கரசர் அங்கு வந்து இறைவரை நேரே தரிசித்தால் அன்றி அவ்விடம் விட்டு நீங்குவதில்லை என உண்ணா நேன்பு இருந்தார். அதனை உணர்ந்த அரசர் இறைவருக்கு சமணர்கள் போட்ட மறைப்புக்களை நீக்கி, நாவுக்கராசரை சுவாமி தரிசிக்கச் செய்தான். இத்தலத்தில் தான் அமர்நீதி நாயனார் ஆவதரித்தார். இதுவே பல்லவர்களுக்குப் பின் சோழர் எழுப்பிய முதல் கல் கோயிலாகும். இங்கே சுவாமி, அம்பாள் திருமேனிகள் அல்லாது வேறு ஒரு திருமேனியும் இல்லை.

சோழநாடு, காவிரி தென்கரை : 24