திருவாரூர் அரநெறி

இறைவர் : அரநெறியப்பர், அகிலேசுவரர்
இறைவி : வண்டார்குழலி, அகிலேசுவரி

பதிகம் : அப்பர் 2

கோயில் சிறிது. திருவாரூர் மூலட்டானம் என்றும், பெரிய திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் தென்-கிழக்கில் மேற்கு பார்த்த கோயில். நமிநந்தி அடிகள் நாயனார், கோயிலின் அருகே உள்ளவர்கள் சமணர்கள் என்று அறியாது, அவர்களிடம் சென்று விளக்கு எரிக்க நெய் கேட்டபொழுது, அவர்கள் தண்ணீரால் விளக்கு ஏற்றுமின் என, அது கேட்டு மனம் வருந்திய நாயனார், சிவபெருமானுக்கு முறையிட, அவர் ‘குளத்து நீரால் விளக்கு எரியும்’ என ஆணையிட, நாயனார் குளத்து நீரை மொண்டு கொணர்ந்து விடியும் அளவும் எல்லா விளக்குகளையும் ஏற்றி அற்புதம் செய்த கோயில். இதனை நாவுக்கரசர், “நமிநந்தி நீரால் விளக்கிட்டமை நீள் அறியும்” என தம் தேவாரத்தில் சிறப்பித்து அருளியுள்ளார். கழற்சிங்க நாயனார், தம் மனைவி பூமாலைக் குறட்டில் கீழே விழுந்து கிடந்த பூவினை எடுத்து மணந்ததும், செருந்துணை நாயனார் அதனைகண்டு தேவியின் மூக்கினை வார்ந்ததும், பின் கழறிற்றறிவார் நாயனார் அவ்விடம் வந்து மனைவியின் செய்கையை அறிந்து, பூவினை எடுத்து மணந்த கையினை துணித்தமையும் நடந்த திருக்கோயில். இக்கோயில் செம்பியன் மாதேவி அமைத்து என்பர்.

பயண வசதிகள் திருவாரூருக்குப் போல் (ரயில், பேருந்து என) பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை :  88