திருநெல்வாயிலரத்துறை (திருவட்டத்துறை)

இறைவர் : அரத்துறைநாதர்
இறைவி : ஆனந்தநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3
தீர்த்தம் : நிவாநதி
தலமரம் : ஆல்

சிறிய பழைய கோயில். அந்தண் சோலை நடுவே, நிவாநதியின் வடகரைமேல் செழிப்பாக இருக்கிறது. “எந்தை ஈசன்” என்ற தேவாரத்தை, சம்பந்தர் பாடி, அருளிய தலம். இராச கோபுரம் இல்லை. திருச்சுற்றில் வால்மீகி முனிவருக்கு தனிச் சந்நிதி உண்டு. பாண்டிய, சேர, சோழ இலிங்கங்கள் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி உளர். மாசிமகத்தை ஒட்டி, பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இரண்டாம் நாள் சம்பந்தர் எழுந்தருளலும், முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் பெறுதலும் நிகழும்.

பெண்ணாடம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து, தென்-மேற்கே 5 கி.மீ. பேருந்து பயண வசதிகள் உண்டு.

நடுநாடு : 1