திருக்கூடலையாற்றூர்

இறைவர் : நெறிகாட்டுநாதர்
இறைவி : புரிகுழலம்மை

பதிகம் : சுந்தரர் 1
தீர்த்தம் : மணிமுத்தாறும், வெள்ளாறும் சங்கமம்

கோயில் சிறிது. 3 நிலை இராச கோபுரம். நல்ல குளிர்ச்சியான சோலைகளின் நடுவே இருக்கிறது. மாசி மாதத்தில் அலங்கார உற்சவம். அம்பாள் சந்நிதிகள் 2. உள்ளே பராசக்தி, வெளியே ஞானசக்தி கோயில்கள். சுந்தரர் தெற்கே இருந்து, திருமுதுகுன்றத்துக்கு செல்லும்போது, சிவபெருமான் அந்தணர் வடிவம் கொண்டு, அவரை அழைத்துச்சென்று, பதிகம் பாடிய தலம். இத்தலத்துக்கு தென்-மேற்கே 12 கி.மீ தூரத்தில் திருஎருக்கத்தம்புலியூர் உள்ளது.

சிதம்பரம், விருத்தாசலம் முதலிய இடங்களில் இருந்து பேருந்தில் செல்லலாம். பயண வசதிகள் உண்டு.

நடுநாடு : 3