திருப்பனையூர்

இறைவர் : ஆடவல்லஅழகர், சௌந்தரநாதர், மணியார்மிடற்றர்
இறைவி : பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + சுந்தரர் 1 = ஆக 2
தீர்த்தம் : அமுதபுட்கரணி (மகாலெட்சுமி தீர்த்தம்)
தலமரம் : பனை

அளவான கோயில். சிவபெருமான் சுந்தரருக்கு நடனக் காட்சி கொடுத்த தலம். அப்பொழுது சுந்தரர், “மாடமாளிகை” என்னும் திருப்பதிகம் பாடி, வழிபட்டார். கரிகாற்சோழர் வளர்ந்த தலம். கரிகாலனுக்கு பிள்ளையார் துணை நின்றபடியால் அவர், “துணையிருந்த பிள்ளையார்” என வழங்கப்படுகிறார். திருச்சுற்றில் பனைமரங்கள் உண்டு. ஆதலினால் இத்தலம் ‘பனையூர்’ எனவும் வழங்கப்படுகிறது.

திருப்புகலூருக்கு தெற்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது. திருவாரூருக்கு வடக்கே 11 கி.மீ தூரம். பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 73