திருப்பெரும்புலியூர்

இறைவர் : மாதோர் பாகமுடையார், வியாக்கிரபுரீசர்
இறைவி : சௌந்ரநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : கொள்ளிடம்

சிறிய கோயில். பிரமோற்சவம் இல்லை. வியாக்கிரபாதர் (புலியீசுவரர்) பூசித்த தலம். அம்பாள் கோயில் வடக்கில் கிழக்கு பார்த்தபடி சிறிய திருமுன்னிலை.

திருவையாறு-திருமழபாடி நெடுஞ்சாலையில் 4 கி.மீ. கோயிலைச் சென்றடைய நெடுந்தூரம் (சுமார் 5 கி.மீ) நடந்து செல்லவேண்டும். ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 53