திருப்பாற்றுறை

இறைவர் : திருமூலநாதர்
இறைவி : மேகலாம்பிகை, மோகனாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : கொள்ளிடம்

அளவான கோயில். மார்கண்டேயர் தாம் பூசனை செய்யும்பொழுது, திருமுழுக்குக்கு பசுப்பால் இல்லையே என்று கவல, சிவபெருமான் பால் பெருகும்படி அருள்புரிந்த தலம் ஆதலின் திருப்பால்துறை எனப் பெயர் பெற்றது. சிவன் பொன் நிறமாக, புற்றில் எழுந்தருளிய தலம்.

இது திருஆனைக்கா என்னும் தலத்துக்கு கிழக்கில் 8 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 59