திருக்குடமூக்கு

இறைவர் : கும்பேசுவரர்
இறைவி : மங்களாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2

பெரிய கோயில். டண்டி, முண்டி என இரு துவாரபாலகர்கள். மூலவர் சுயம்புலிங்கம். கும்பவடிவில் உள்ளார். அபிஷேகம் நிகழும்போது கவசம் சார்த்தப்படும். ஏனைய வேளைகளில் பச்சைக் கற்பூரம் சார்த்தப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமாத மக நட்சத்திரத்தில், கங்கை முதலிய மாதாக்கள் தங்கள் பாபங்களைப் போக்க இங்கு வந்து மகாமகக் குளத்தில் தீர்த்தம் ஆடுவதாக ஐதீகம். மகாமகத் தீர்த்த விழா பெரும் சிறப்பாக இலட்சக்கணக்கான அடியார்கள் நடுவில் நடைபெறும். மகாமகக் குளம், நாகேஸ்வரர் கோயிலுக்கும், விசுவநாதர் கோயிலுக்கும் இடையில் இருக்கிறது. கும்பகோணம் பெரிய நகரம். கோயில், குளம், சத்திரம், விடுதி, கல்வி நிலையம் என பலவுண்டு. நகரத்தில் ஒருபக்கத்தில் காவிரி ஆறும், மறுபக்கத்தில் அரிசிலி ஆறும் ஓடுகின்றன.

பயண வசதிகள் பல. கும்பகோணம் இருப்புப்பாதை நிலையமும், பேருந்து நிலையமும் பெரியவை. பல பகுதிகளிலிருந்து பல வாகனங்கள் எந்த நேரமும் வந்து போகின்றன.

கும்பேசுவரர் ஏழூர் வரும் வழியில் உள்ள தலங்கள் : கும்பகோணம், கலயநல்லூர், திருவலஞ்சுழி, தாராசுரம், சுவாமிமலை, கொட்டையூர், மேலைக்காவிரி முதலியன.

காவிரி தென்கரை : 26