திருத்தண்டலை நீணெறி (ஊட்டித்தண்டலை, தண்டலைச்சேரி)

இறைவர் : நீள்நெறி நாதர்
இறைவி : ஞானாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : குருந்தம்

மிகச்சிறிய அழகிய கோயில். மாடக்கோயில். கோச்செங்கட்சோழர் எழுப்பியது. தாயனார் செந்நெல்லரிசி, மாவடு, செங்கீரை முதலியன நாள்தோறும் கொண்டு இறைவனை ஊட்டி வழிபட்ட தலம். இது ஊட்டித்தண்டலை எனவும் பெயர்பெறும். இங்ஙனம் செய்துவரும் நாளிலே ஒருநாள் அவற்றை கமரில் சிந்திவிட்டார். அதனால் கவலையுற்று தம் வாளைக்கொண்டு தம் கழுத்தினை அரிய முயன்றபோது இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டார். அவர் வாழ்ந்த கணமங்கலம் கிழக்கே அண்மையில் உள்ளது. இங்கு கோயிலோ, மடமோ, சின்னமோ இல்லை. இசுவாமியர் வாழும் சிற்றூராக உள்ளது. சிதம்பரம் நடேசப்பெருமான் உச்சிக்காலத்தில் இங்கு வந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். நடேசர் சந்நிதி மிகச்சிறப்பாக உள்ளது. திருமால் ஆமை உருவம் கொண்டு கடலை கலக்கியபோது, சிவபிரான் அவரை அடக்கி, அந்த ஆமையின் ஓட்டை அணிந்த தலம். கோச்செங்கட்சோழர் வழிபட்ட தலம்.

பயண வசதிகள் உண்டு. திருத்துறைப்பூண்டி இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்திலிருந்து 4 கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 110