திருக்கச்சூர் (ஆலக்கோயில்)

இறைவர் : அமுதத்தியாகர், விருந்திட்ட வரதர்
இறைவி : அஞ்சனாட்சி

பதிகம் : சுந்தரர் 1

சிறிய கோயில். இராசகோபுரம் இல்லை. வடக்கு வாயில். நேரே அம்பாள் சந்நிதி. உள்ளே சென்றவுடன் தரிசிக்க இருப்பது சுவாமி கோயில். ஈஸ்சுரனை மகாவிஷ்ணு ஆமை உருவாகக் கொண்டு அர்சித்தார். ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஆலக்கோயிலை தரிசித்து பதிகம் பாடினார்.

மலைக்கோயிலும் சிறிது. இறைவர் மருந்தீசர். இறைவி இருள்நீக்கித்தாயார், அந்தகார நிவாரணி. மேற்குச் சந்நிதி. மேற்கே வாயில் இல்லை. இங்கு சுந்தரர் வந்தபோது பசியால் வருந்தினார். சுவாமி பிராமண வீடுகள் தோறும் சென்று, அன்னம் யாசித்துக் கொணர்ந்து அவருக்கு அளித்து, மறைந்து அருளிய தலம். மலைக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு துறவி தங்கியிருந்து, திருப்பணி செய்து, குடமுழக்கும் செய்துவைத்தார். அம்மை சந்நிதி அழகாக இருக்கிறது. இரந்து இட்ட ஈசர் கோயில், கருக்கடிப்பிள்ளையார், இரந்திட்ட வரதர் கோயில்கள் மலைக்கு செல்லும் வழியில் இருக்கின்றன. இக்கோயிலுக்குள் அமுதத்தியாகர் திருமுன் உண்டு. பங்குனி மாதத்தில் தியாகேசர் நடனவிழா சிறப்பாக நிகழும் என்பர்.

பயண வசதிகள் உண்டு. சிங்கப்பெருமாள் கோயில் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து கோயில் வடமேற்கே கி.மீ. பேருந்து வசதிகள் உண்டு.

தொண்டைநாடு : 26