திருஅன்பிலாலந்துறை

இறைவர் : ஆலந்துறைநம்பி, பிரமபுரீசுவரர்
இறைவி : சௌந்தரநாயகி
விநாயகர் : செவிசாய்த்த விநாயகர்

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : கொள்ளிடம்
தலமரம் : ஆல்

சிறிய கோயில். கருங்கல் திருப்பணி. அம்பாள் கோயில் வடக்குப்புறம். கிழக்கு பார்த்தபடி உள்ளது. திருவிழாக்கள் இல்லை. மொட்டைக் கோபுரம். நடராஜர், சோமாஸ்கந்தர் விழாத் திருமேனிகள் உண்டு. சம்பந்தர் இங்கு வந்து கொண்டிருந்த போது, கொள்ளிட ஆற்றைக் கடக்க முயன்றார். அவ்வேளை அங்கே கிடந்த கற்கள் எல்லாம் சிவலிங்கங்களாகத் தோற்றம் அளிக்கவே, அக்கரையில் இருந்து பதிகம் பாடினார். அவர் பாடிய பதிகத்தைக் கேட்கும்படி சிவன் விநாயகருக்குக் கூறவே, அவர் செவி சாய்த்துக் கேட்டார். சரிந்த தலையோடு செவி கொடுத்துக் கேட்கும் பாவவையில் பிள்ளையார் உள்ளார். அதனாலே அவ்விநாயகருக்கு செவிசாய்த்த விநாயகர் என்னும் திருநாமம் உண்டாயிற்று.

லால்குடியில் இருந்து 5 கி.மீ. பயண வசதிகள் உண்டு. இங்கிருந்து வடக்கே 3 கி.மீ தொலைவில் ஆனாயநாயனார் திருஅவதாரம் செய்த மங்கல் ஊர் உள்ளது.

சோழநாடு, காவிரி வடகரை : 57