திருக்கானூர்

இறைவர் : செம்மேனியப்பர், கரும்பேசுரர்
இறைவி : சிவலோகநாயகி, சௌந்தரநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : கொள்ளிடம்

உமைஅம்மையார் இறைவனை நோக்கி தவம் செய்யும்போது, இறைவர் நெருப்புத் தூண் வடிவில் காட்சி கொடுத்து, அருள் புரிந்த தலம். இப்போ கோயில் மாத்திரம் கொள்ளிடத்தின் கரையில் உள்ளது. நிலமட்டத்துக்கு கீழே உள்ளது. சுற்றெப்ப 150 ஆண்டுகளுக்கு முன் ஊர், ஈழநாட்டு திருக்கேதீச்சரம் கோயில் போல, மண்மேடிட்டு அழிந்து போயிற்று. குடிகளும் இல்லை. சிறிது காலம் கழித்து, சிவனடியார்கள் மண்ணை வாரி எடுத்து, கோயிலை மாத்திரம் வெளிக்கொணர்ந்து வழிபடுகின்றனர்.

தஞ்சாவூர்-திருச்சி மார்க்கம், பூதலூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 16 கி.மீ பணம். பேருந்தில் சென்று, சிறிது தூரம் கால் நடையாக செல்லவேண்டும்.

சோழநாடு, காவிரி வடகரை : 56