திருப்பாண்டிக்கொடுமுடி

இறைவர் : கொடுமுடிநாதர், மகுடேசுவரர், மலைக்கொழுந்தீசர்
இறைவி : வடிவுடைநாயகி, பண்மொழியம்மை
விநாயகர் : காவிரிகண்ட விநாயகர்

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3
தலமரம் : வன்னி
தீர்த்தம் : தேவதீர்த்தம், பிரமதீர்த்தம், பரத்துவாசதீர்த்தம்

மூன்று கோயில்கள் இணைத்த ஒரு மிகப்பெரிய கோயில். கொடுமுடி – பெரிய சிகரம். மேருமலையின் சிகரத்தில் இருந்து சிதறிய 5 மணிகளுள் வைரமணி வீழ்ந்து திருக்கொடுமுடி ஆயிற்று. விநாயகப் பெருமான், அகத்திய முனிவரின் கமண்டலத்தைக் காக்கை வடிவில் சென்று கவிழ்த்திய இடம் இதுவே ஆகும். கோயில்கள் காவிரியின் மேற்குக் கரையில் உள்ளன. பிரமதேவரும், அரங்கநாதரும் மகுடேசுவரரை (மூலவனார்) வணங்க வந்தார்கள். இருவருக்கும் தனிக் கோயில்கள் உண்டு. பிரமதேவருக்கு வேறு எங்கும் தனிக் கோயில் இல்லை. இவர் இங்கு வன்னி மரத்தின் அடியில் இருக்கிறார். மிகமிகச் சிறிய அளவில், சுயம்புவாக மகுடேசுவரர் எழுந்தருளி உள்ளார். வடிவுடைநாயகி அம்பாள் கோயில், சுவாமி கோயிலுக்கு அருகே, கிழக்கு நோக்கி இருக்கிறது. கறையூர், கொடுமுடி காவிரியின் தென்-மேற்குக் கரையில் உள்ளன. இங்கு சுந்தரர் நமச்சிவாயப் படிகள் பாடியுள்ளார்.

பயண வசதி உண்டு. திருச்சி-ஈரோடு பாதையில், ஈரோட்டில் இருந்து 37 கி.மீ.

கொங்குநாடு : 6