திருஎறும்பியூர்

இறைவர் : எறும்பீசர்
இறைவி : கருங்குழல்நாயகி

பதிகம் : அப்பர் 2

கோயில் பழையது. மலைமேல் இருக்கிறது. 118 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். கருங்கல் திருப்பணி. அம்மன் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு வெளியே தனியே உள்ளது. நடேசர் திருமேனி மிக அழகு. தாருகாசூரன் தேவர்கள், முனிவர்களை வதைத்தான். தேவலோகத்தை கைப்பற்றினான். இந்திரனும், தேவர்களும் பிரம்மாவிடம் முறையிட்டார்கள். அவர், அவர்களை பூலோகம் சென்று திருஎறும்பியூரில் வழிபட்டால் இறைவர் அருள்புரிவார் என்றார். தேவர்கள் தாங்கள் வழிபடுவதை அசுரர்கள் காணக்கூடாது என்று நினைத்து தேவர்கள் அனைவரும் எறும்புகளாக வழிபட்டனர். சிவலிங்கத்தில் சாத்தப்பட்ட எண்ணெய் அவர்களை ஏறவொட்டாமல் தடுக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர் அவர்களுக்கு இரங்கி புற்றாக மாறினார். அவர்களுக்கு சிவபெருமான் காட்சி அளித்து அவர்கள் குறை தீர்த்து அருளினார். கோயிலுக்கு எதிரில் நடுவே நீராழி மண்டபத்தோடு கூடிய பெரிய அழகிய தீர்த்தக்குளம் உண்டு.

ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு. திருச்சி சந்திப்புக்கு கிழக்கே 10  கி.மீ. எறும்பியூர் இருப்புப்பாதை  நிலையத்திலிருந்து கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 7