திருக்கோவலூர் வீரட்டம்

இறைவர் : வீரட்டேசுவரர்
இறைவி : சிவாநந்தவல்லி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : பெண்ணையாறு

பெரிய கோயில். மேற்கு நோக்கிய சந்நிதி. பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ளது. அட்ட வீரட்டத்தலங்களில் 2-வது. அந்தகாசுரனை அடர்த்த தலம். இறைவி கோயில் தனியே உள்ளது. ஔவைப் பிராட்டியார் பூசித்த ஸ்ரீ பெரியானைக் கணபதி உள் சுற்றுள் உள்ளார். அவர் சிலை கணபதிக்கு முன் உண்டு. பின் சுவரில் அவர் பாடிய விநாயகர் அகவல் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர், சுந்தரர், சேரமான் நாயனாரோடு திருக்கயிலை செல்லப் புறப்பட்ட தலம். மெய்ப்பொருள் நாயனார் அரசு செய்து, சிவனடியாருக்கு தொண்டு செய்து, கொல்லப்பட்டு, பேறு பெற்ற தலம்.

விழுப்புரம்-காட்பாடி இருப்புப்பாதையில் இருக்கும் திருக்கோவலூர் நிலையத்தில் இருந்து கி.மீ. ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு.

நடுநாடு : 11