திருப்பயற்றூர் (திருப்பயற்றங்குடி)

இறைவர் : பயற்றீசர்
இறைவி : காவியங்கண்ணி, நேத்திராம்பிகை

பதிகம் : அப்பர் 1

கோயில் சிறிது. ஏழை வணிகன் ஒருவன், மிளகை சுங்கவரியினின்றும் தப்பித்துக்கொள்ள, அதனைப் பயறாகத் தரும்படி இறைவனை வேண்ட, அவர் அவன் விரும்பிய வண்ணமே செய்து, மீண்டும் அது மிளகாக வரச் செய்தவர். அதனாலே இத்தலத்துக்கு இப்பெயர் ஏற்பட்டது. பஞ்சநதவாணன் தன் கண் நோய் நீங்கியதற்காக இக்கோயிலுக்கு நிலம் கொடுத்தான். இன்றும் கண்நோய் உற்றோர் இங்கு வந்து, இருந்து, நோய் மாற்றிக்கொண்டு செல்கின்றனர்.

திருவாரூருக்கு வடக்கே 6 கி.மீ இலிருக்கும் திருவிற்குடி வீரட்டில் இருந்து, பேருந்தில் ஊரை அடைந்து, அங்கிருந்து கால் நடையாக கி.மீ சென்று, கோயிலை அடையலாம்.

சோழநாடு, காவிரி தென்கரை : 78