திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரன் பட்டணம்)

இறைவர் : நீலகண்டேசுவரர்
இறைவி : நீலமலர்க்கண்ணம்மை

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : நீலோற்பல தீர்த்தம்
தலமரம் : வெள்ளெருக்கு

கோயில் பெரிது. கோயிலுக்குள் வெள்ளெருக்கஞ் செடி உண்டு. சம்பந்தருக்கு அடிமை பூண்டு, அவருடன் திருத்தலங்கள் தோறும் சென்று, அவர் பாடும் தேவாரங்களை தம் யாழில் இட்டு வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதரித்த தலம். அவரின் மரபில் வந்த ஓரம்மையாரே இராசராச சோழன் விருப்பத்துக்கு அமைய பண் வகுத்துத் தந்தவர். உருத்திரசன்மாதம் ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற தலம். அவருடைய உருவம் கோயிலில் உண்டு.

விருத்தாசலம் என்னும் முதுகுன்றத்துக்கு தெற்கே 11 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

நடுநாடு : 4