திருச்சுழியல்

இறைவர் : திருமேனிநாதர்
இறைவி : துணைமாலைநாயகி

பதிகம் : சுந்தரர் 1
தீர்த்தம் : கவ்வைக்கடல்

பெரிய கோயில். பார்வதி தேவியார் தம்மை சிவபெருமான் மணக்க தவம் புரியும்படி பூசித்த தலம். நடேசர் சிலாவிக்கிரகம். சதாநந்த முனிவர் பூசித்த தலம். கவ்வைக்கடல் என்ற தீர்த்தம் கோயிலுக்கு எதிரில் உண்டு. சுந்தரர் சேரமான் பெருமாளுடன் வந்து தரிசித்தது. ஆடித் திருவிழாவில், அம்பாள் ஆற்றில் தபசு இருக்கும் திருக்கோலம், சுவாமி இடபாரூரராய் காட்சி அளித்தல், இரவு ஆற்றங்கரையில் தபசு மண்டகப்படியில் வெள்ளி இடப வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்து வீதி உலா வருதல் முதலியன பார்த்து மகிழ்ந்து தரிசிக்கத் தக்கன. சமயகுருவர் நால்வராலும் பாடப்பெற்றது. கௌதமர், அகலிகை சிலாவிக்கிரகங்கள் உண்டு. நல்ல கருங்கல் திருப்பணி. கோயிலின் உள்ளே தண்டாயுதபாணி கோயில், மயூரம், பலிபீடம், கொடிமரம் முதலியவற்றோடு இருக்கிறது. சிவபெருமான் கௌதமமுனிவருக்கு திருக்கல்யாணக் காட்சி தந்த தலம்.

பயண வசதிகள் பல உண்டு. விருதுநகர்-தென்காசி மார்க்கம், விருதுநகர் இருப்புப்பாதை   நிலையத்தில் இருந்து 35  கி.மீ. பேருந்து வசதிகள் மிக உண்டு.

பாண்டிநாடு : 12