திருக்கோகரணம்

இறைவர் : கோபலேஸ்வரர், கோகர்ணநாதர்
இறைவி : கோகர்ணநாயகி, பார்வதி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : கோகர்ண தீர்த்தம்

கோயில் பெரிது. மூலவர் மிகச் சிறியவர். கொட்டைப்பாக்கு அளவில் இருப்பார். ஆவுடையாரில் மறைக்கப்பட்டு இருக்கிறார். காசியில் போல இங்கும் எல்லாரும் திருமேனியை தொட்டும், திருமஞ்சனம் செய்தும், மலர் இட்டும், தீப ஆராதனைகளோடு வழிபடலாம். இராவணன் கயிலையில் இருந்து ஒரு சிவலிங்கத்தை இலங்கையில் பிரதிஷ்டை செய்ய சிவபெருமானிடம் இருந்து பெற்றுவந்தான். அவசிய கருமமாக அதனை கீழே வைத்து, பின் அதனை எடுக்கமுடியாது போய்விட்டது. எடுக்க முயலும்போது சிவலிங்கம் பசுவின் காதுபோல் குழைந்துவிட்டது. அதனால் இத்தலம் கோகர்ணம் என்றும், எடுக்கமுடியாது இருப்பதனால் கோபலேசுவரர் என்றும் பெயர்கள் பெற்றிருக்கின்றது. இங்கு அன்னதான மடங்கள், சத்திரங்கள், தாமே சமைத்து உண்போருக்கு வேண்டிய வசதிகள் முதலியன உண்டு.

கோகர்ணம் பெரிய நகரம். முன் பம்பாய் மாநிலத்துக்கு சேர்ந்து, இப்போ கன்னடத்தோடு சேர்க்கப் பட்டுள்ளது. கோயம்புத்தூர் வழியாக கொல்லம் போய், மேற்குக் கடலோரமாக சாலை வழியே பேருந்தில் செல்லவேண்டும். பயணம் மிகச்சிரமம் என்பர்.

துருவநாடு : 1