திருவடுகூர் (ஆண்டார் கோயில்)

இறைவர் : வடுகூர்நாதர்
இறைவி : வடுவநீர்க்கண்ணியம்மை

பதிகம் : சம்பந்தர் 1

அளவான கோயில். கிலமுற்றிருக்கிறது. வடுகன் என்னும் வைரவர் பூசித்த தலம். ஆண்டார் கோயில் எனவும் வழங்குகிறது. இத்தலத்துக்கு தென்மேற்கே திருத்துறையூர் என்னும் தலம் இருக்கிறது.

பயண வசதிகள் உண்டு. விழுப்புரம்-புதுச்சேரி இருப்புப்பாதை மார்க்கத்தில் சின்னபாபு சமுத்திர நிலையத்திலிருந்து 3 கி.மீ. புதுச்சேரி, விழுப்புரத்திலிருந்து பேருந்துகள் உண்டு.

நடுநாடு : 16