திருநணா (பவானி, பவானிமுக்கூடல்)

இறைவர் : நட்டாற்றீசுரர், சங்கமேசுரர், திருநணாவுடையார்
இறைவி : பண்ணார்மொழியம்மை, வேதமங்கை, வேதநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : பவானிமுக்கூடல்
தலமரம் : இலந்தை

பெரிய கோயில். 5 நிலை இராச கோபுரம். கோயிலுக்குள், அதன் வடக்கு வாயிலால் தான் போகவேண்டும். இதனை தக்ஷிப்பிராகை என்பர். வடக்கில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பிராகை போல இங்கு காவிரி, பவானி, அந்தர்யாமியாக (வாகினியாக, நிலத்தின் கீழே மறைந்தோடும்) அமுதநதி ஆகியவற்றின் சங்கமம். சங்கமத்துறைக் கரையில் இறங்கித் தீர்த்தம் ஆட படிக்கட்டுண்டு. சங்கமமும், நாற்புறமும் உள்ள இயற்கைக் காட்சி மனத்தைக் கொள்ளை கொள்ளுவான. நண்ணாவூர் நாணாவூர் ஆயிற்று. ஒரு தீங்கும் நண்ணாத ஊர். வத்ரிகாச்சரமம் – இலந்தைவனம். இவ் இலந்தைக் கனியை உண்டவர் நன் மக்கட்பேறு பெறுவர். உள்ளே ஆதிகேசவப் பெருமாள் கோயில் உண்டு. வாயிலில் விநாயகர், ஆஞ்சநேயர் கோயில்கள் உள. இருவரும் வீணை, தாளக்கட்டுடன் விளங்குகிறனர். விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் தனித்தனியே உண்டு. சாஹரேசர் – 3 கால், 3 கை, 3 தலைகளுடன் விளங்குகிறார். சங்கமேசுரருக்கு அமுது படையல் : மிளகுரசம், அரைகீரை சுண்டல். விசுவநாதர் கோயிலுக்கு தெற்கே சங்கமேசுரர் கோயில். மேற்கே அமிர்தலிங்கம் – சுயம்பு.

பயண வசதிகள் நிறைய உண்டு. ஈரோடு இருப்புப்பாதை நிலையம், பேருந்து நிலையங்களில் இருந்து 15 கி.மீ தூரம்.

கொங்குநாடு : 3