திருப்புறம்பியம்

இறைவர் : சாட்சிநாதர்
இறைவி : கரும்பன்ன சொல்லி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3
தலமரம் : வன்னி

அளவான கோயில். பிரளய காலத்தில், புறம்பாய் அழியாமல் இருந்தமையால் இப்பெயர் பெற்றது. ஒரு செட்டிக் கன்னிப்பெண் திருமணம் ஆகுமுன் கணவனுடன் கூடி இங்கு வந்தபோது, அவன் பாம்பு தீண்டி இறக்க, அவள் வருந்தினாள். சம்பந்தர் இதனை அறிந்து, பதிகம் பாடி, செட்டியை உயிர்ப்பித்து, திருமணம் செய்து வைத்தார். இவற்றிற்கு சாட்சியாக இருந்த இறைவர் சாட்சிநாதர் என வழங்கப் பெற்றார். இங்குள்ள விநாயகர், “பிரளயங் காத்த விநாயகர்” எனப்பெறுவார். மாதம் தோறும், விநாயக சதுர்த்தி அன்று, 1 குடம் தேன் அபிடேகம் ஆகிறது. ஏனைய நாள்களில் திருமுழுக்கு இல்லை.

கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில், தெற்கில் மண்ணியாறும், கொள்ளிடமும் கலக்கும் இடத்தில் இருக்கிறது. பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 46