திருவைகல் மாடக்கோயில்

இறைவர் : வைகநாதேசுவரர்          கோமளேசுரர்
இறைவி : வைகலாம்பிகை            இளங்கோதையம்மை

பதிகம் : சம்பந்தர் 1

“வைகல் ஓங்கிய வளநகர் மாடக்கோயில்”. “வைகல்” கோயில் வேறு. “மாடக்கோயில்” வேறு. இரண்டுக்கும் சேர்த்து சம்பந்தர் பதிகம் 1. மாடக்கோயில் கோச்செங்கட் சோழர் திருப்பணி.

வளநகர் : இங்கு மூன்று கோயில்கள் ஒன்றாக இருக்கின்றன.

1.   கிழக்கே உள்ள கோயில் : கிழக்கு சந்நிதி. இறைவர் : பிரமபுரீசுவரர். இறைவி : பிருகன்நாயகி.

2.   மேற்கே உள்ள கோயில் : இறைவர் : சண்பகபாணியேசுவரர். இறைவி : கோமளவல்லி. விஷ்ணு பூசித்தது. தலமரம் : சண்பகம்.

3.   கிழக்கு பார்த்த சந்நிதி : இறைவர் : காசிவிசுவநாதர். இறைவி : விசாலாட்சி. இலட்சுமி பூசித்து.

“வைகல்” என்னும் கோயிலுக்கு தெற்கே ½ கி.மீ தொலைவில் “மாடக்கோயில்” இருக்கிறது. இவ்வாலயம் கோச்செங்கட் சோழர் எழுப்பிய மாடக்கோயில்களுள் ஒன்று.

மயிலாடுதுறை-தஞ்சாவூர் மார்க்கம், ஆடுதுறை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 8 கி.மீ. கும்பகோணத்தில் இருந்தும் வரலாம். ரயில், பேருந்து பயண வசதிகள் மிகவும் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 33