திருஅழுந்தூர் (தேரழுந்தூர்)

இறைவர் : வேதபுரீசர்
இறைவி : சௌந்தரநாயகி (அம்பிகை)

பதிகம் : சம்பந்தர் 1

மிகப் பழைய சிறிய கோயில். 5 நிலை இராசகோபுரம். மகாமண்டபம் 8 கோணங்கள். மேற்கு பார்த்த சந்நிதி. மாடக்கோயில், அம்பாள் கோயில் வெளியே. மறையவர் அதிகம் வாழும் ஊர். அழுந்தை மறையவர் பெருமையை சம்பந்தர் “அழுந்தை மறையோர் வழிபாடு செய் மாமட மன்னினையே” என்று பாடல் தோறும் சிறப்பித்துள்ளார்.

பயண வசதிகள் உண்டு. மயிலாடுதுறை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ளது. குற்றாலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 5 கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 38