மேலைத்திருக்காட்டுப்பள்ளி

இறைவர் : தீயாட்டியப்பன்
இறைவி : வார்கொண்ட முலையம்மை, சௌந்தராயகியம்மை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : காவிரி

5 நிலை இராச கோபுரம். உள்ளே முதல் தெற்கு பார்த்த அம்பாள் சந்நிதி. பின் 3 நிலை கோபுரம். உள்ளே மகா மண்டபம். லோமச முனிவருக்கு தனிச் சந்நிதி. உறையூர் நந்தவனத்தில் பெற்ற செவ்வந்தி மலரை, மன்னன் பத்தினிகளுக்குள் மூத்தாள் மட்டும் அதனை சிவபிரானுக்கு சாத்தி மகிழ்ந்தாள். உறையூரில் மண்மாரி பெய்ய, மூத்தாள் மாத்திரம் தப்பி, மேலைத்திருக்காட்டுப்பள்ளிக்கு வர, அவளுக்கு இரங்கி, கானல் வெப்பம் தணியச் செய்த திருவூர். இவ்வூரில் காவிரியில் இருந்து குடிமுருட்டி ஆறு பிரிகிறது.

திருவையாற்றுக்கு மேற்கே 18 கி.மீ. திருப்பூந்துருத்திக்கு மேற்கே 12 கி.மீ. தஞ்சாவுருக்கு மேற்கில் உள்ள பூதலூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து வடக்கே 8 கி.மீ. குடிமுருட்டி ஆற்றின் தெற்குக் கரையில் உள்ளது. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 9