திருவலிவலம்

இறைவர் : மனத்துணைநாதர்
இறைவி : வாளையங்கண்ணி, மாழையங்கண்ணி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 1 + சுந்தரர் + 1 = ஆக 4
தலமரம் : புன்னை
தீர்த்தம் : காரணகங்கை, சங்கரதீர்த்தம்

பெரிய கோயில். வடக்கு, தெற்கு, மேற்கு பக்கங்களில் ஒரு அகழி உண்டு. சுவாமி கோயில் 16 படிகள் கொண்ட கட்டுமலை மேல் மாடக்கோயிலாக அமைந்துள்ளது. ஐம்பொன் திருமேனிகள் அழகாக இருக்கின்றன. வலியன் என்னும் கருங்குருவி வழிபட்டதனால் இப்பெயர் பெற்றது. சைவர்கள் இடையே பிரபலமாகப் பாடப்பெற்று வரும் “பிடியதன் உரு”, “ஒல்லையாறி” என்ற தேவாரப்பாடல்கள் இத்தலத்தில் பாடப்பெற்றன.

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி இருப்புப்பாதையில் மாவூர் ரோடு இருப்புப்பாதை  நிலையத்திலிருந்து 9 கி.மீ.உம், திருவாரூரிலிருந்து தெ.கி. 9½ கி.மீ.உம் தூரம். ரயில், பேருந்து வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 121