திருச்சேறை

இறைவர் : செந்நெறியப்பர்
இறைவி : ஞானவல்லி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 2 = ஆக 3
தீர்த்தம் : மார்க்கண்ட தீர்த்தம்

சிறிய கோயில். இது உடையார் கோயில் எனவும் வழங்கப்படும். தௌமிய முனிவர் வழிபட்டு, பேறு பெற்ற தலம்.

கும்பகோணத்தில் இருந்து 14½ கி.மீ. செல்லும் வழியில் அரிசிற்கரைப்புத்தூர், திருநறையூர் முதலியன உண்டு. பயண வசதிகள் சுமார் ஆனவை.

சோழநாடு, காவிரி தென்கரை : 95