திருஆமாத்தூர்

இறைவர் : அழகியநாதர்
இறைவி : அழகியநாயகி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 2 + சுந்தரர் 1 = ஆக 5
தீர்த்தம் : பம்பை ஆறு

பெரிய கோயில். பெரிய நந்தி. பசுக்களுக்கு தாயாக இறைவன் அருளும் தலம். பிருங்கி முனிவர் பூசித்த தலம். பிருங்கி முனிவர் சக்தியைப் பூசிப்பதில்லை என்ற நியதி பூண்டவர். அம்மையார் ஒரு பாகம் பெற்றபோதும் முனிவர் வண்டு உரு எடுத்து, துளைத்து சிவனையே வழிபட்டனர். ஆனால் சக்தி அருள் இன்றி சத்தி கெட்டனர் ஆதலின் நடக்கும் வலிமை இன்றி நின்றபோது, சிவத்தின் அருளால் மூன்றாவது கால் பெற்றனர். சக்தி சாபத்தினால் இத்தலத்தில் வன்னி மரமாக உரு எடுத்தனர். பின்னர் அம்மையாரை வழிபட்டு அவர் அருளால் சாபம் நீங்கப் பெற்றவர். அதற்குச் சான்றாக இங்கு அம்மையாரது கோயிலில் நிருதி மூலையில் வன்னி மரம் தலமரமாக உள்ளது. சுவாமி கோயில் மாடக் கோயில். கிழக்கு பார்த்தபடி. நேர் எதிரே அம்மையார் கோயில் மேற்கு நோக்கியும், வெவ்வேறாக உள்ளது. இது ஒரு தலச் சிறப்பாகும்.

விழுப்புரம் இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்தில் இருந்து 6 கி.மீ. ரயில் பேருந்து பயண வசதிகள் பல உண்டு.

நடுநாடு : 21