திருப்பரிதிநியமம் (பருதியப்பர் கோயில்)

இறைவர் : பருதியப்பர், பாஸ்கரேஸ்வர சுவாமி
இறைவி : மங்களாம்பிகை நாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்

பெரிய கோயில். 5 நிலை இராச கோபுரம். உள் கோபுரம் 3 நிலை. இரண்டாம் பிராகாரத்தில் தென்னை, வில்வி, நந்தியாவர்த்தை முதலியன உண்டு. மூலவர் சுயம்பு. குதிரைக்கு புல் செதுக்க, இரத்தம் சிந்தக் கண்டதும், குதிரைக்காரன் சிவிச்சக்கரவர்த்தியிடம் முறையிடச் சென்றான். குதிரைக்காரன் சொற்கேட்ட சிவிச்சக்கரவர்த்தி, புல்லினூடே இருந்த சிவலிங்கத்தைப் பார்த்து திகைத்தபோது, ‘இவ்விடத்திற்கு பரிதி நியமம் என்று பெயர்’ என ஒரு வானொலி கேட்டது. சிவிமன்னன் பரிதியீசுவரருக்கு கோயில் எடுத்து, குடமுழுக்கு செய்து, நன்கொடைகள் அளித்தான். பங்குனித் திங்கள் 17, 18, 19-ம் நாள்களில், சூரிய ஒளி இறைவன் மீது படர்கிறது. சூரிய பூசை நடைபெறுகிறது.

தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை மார்க்கம், சாலியமங்கலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 15 கிமே. பயண வசதிகள் மிக உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 101