திருக்கடவூர் மயானம்

இறைவர் : பிரம்மபுரீசர்
இறைவி : மலர்க்குழல் மின்னம்மை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3
தீர்த்தம் : காசிதீர்த்தம்

சிறிய கோயில். “திருமெஞ்ஞானம்” என வழங்கப்படுகிறது. மேதகு பார்த்த சந்நிதி. சிவபெருமான், நான்முகனை நீறாக்கி, பின் உயிர்ப்பித்து, படைத்தல் தொழிலைக் கொடுத்தருளிய தலம். இத்தலத்துக்கு அருகில் இருக்கும் கிணற்றில் பங்குனி அச்சுவினியில் காசிகங்கை நீர் வந்து கலப்பதால், அந்நாளில் அதில் நீராடுவது சிறப்பு என்பர். மற்ற நாள்களில் இக்கிணற்று நீர் இக்கோயிலுக்கும் திருக்கடவூர் வீரட்டானக் கோயிலுக்கும் திருமஞ்சன நீராகும்.

திருக்கடவூர் வீரட்டித்திலிருந்து கி.மீ. நடந்து செல்லவேண்டும். மயிலாடுதுறை-தரங்கம்பாடி மார்க்கம் திருக்கடவூரில் இருந்து 1 கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 48