திருக்கன்றாப்பூர்

இறைவர் : நடுதறியப்பர்
இறைவி : மாதுமையம்மை

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : ஞானதீர்த்தம்

சிறிய கோயில். இராசகோபுரம் இல்லை. கிராமத்தின் நடுவே இருக்கிறது. கிராமத்தை சுற்றி வயல்வெளி. கோயில் சுவரில் ஒரு சிறிய வர்ண ஓவியத்தில் கோயில் வரலாறு தீட்டப்பட்டுள்ளது. ஒரு சைவப்பெண் ஒரு வைணவனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவர் மாமன்-மாமி முதலியோர் காணாதபடி கன்றுக்குட்டி கட்டியிருந்த ஆப்பையே சிவலிங்கமாகப் பாவித்து மலர் தூவி பக்தி சிரத்தையோடு வழிபட்டு வந்தால். இது கணவனுக்குத் தெரியவரவே அவை அத்தறியை கோடரியால் கொத்திப் பிளந்தான். அந்த ஆப்பிலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு அவர்களுக்கு அருள் செய்தார். இவ் வரலாறு மிக அழகான ஓவியமாக கோயில் சுவரில் தீட்டப்பட்டுள்ளது.

திருநாட்டியாத்தான்குடி இருப்புப்பாதையிலிருந்து 9 கி.மீ. பேருந்துப் பயண வசதி உண்டு. திருக்கைச்சினத்துக்கு பேருந்தில் சென்று 1 கி.மீ. உள்ளே நடந்து செல்ல வேண்டும்.

சோழநாடு, காவிரி தென்கரை : 53