திருநின்றியூர்

இறைவர் : மகாலெட்சுமியீசுரர்
இறைவி : உலகநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 2 = ஆக 4

அளவான அழகிய கோயில். மன்னர் ஆணைப்படி நிலத்தை வெட்டியபோது வெளிப்பட்ட இலிங்கம். இலிங்கமூர்த்தியின் தலையிலே வெட்டுப்பட்ட பள்ளம் உளது என்பர். இலக்குமி பூசித்த தலம். இக்கோயிலிலே இறைவனை நியமமாக தரிசித்து வந்த ஒரு சோழ அரசன் கொணர்ந்த திரி (தீவர்த்தி) நின்ற (அவிந்த) போது, இறைவரது இலிங்கத் திருமேனியினின்றும் ஒரு சோதி தோன்றிய பதி.

மயிலாடுதுறை-சிதம்பரம் மார்க்கம், ஆனந்த தாண்டவபுரம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 9 கி.மீ. பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 19