திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை, பாரியது பறம்பு)

இறைவர் : கொடுங்குன்றநாதர்
இறைவி : மங்களநாயகி, குயிலமுதவல்லி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சுந்தரதீர்த்தம்

மலை அடிவாரத்திலும், மலைச்சாரலிலும் கோயில்கள் இருக்கின்றன. இராசகோபுரம் இல்லை. படிக்கட்டு வழியே ஏறி மேலேயுள்ள பைரவர், முருகன் கோயில்களுக்கு செல்லவேண்டும். அடிவாரத்தில் விசாலமான மண்டபம். அடிவாரத்தில் உள்ள கோயில் சம்பந்தர் பாடல் பெற்றது. மலைக் கோயில்களில் ஒன்று குடையப்பட்டது. சுனைகள் உண்டு. வீரபத்திரர் கோயில் சாந்நித்தியமாக விளங்குகிறது. இங்கும் ஒரு சிவாலயம் உண்டு. மூலவரின் பின்னால் அம்மை-அப்பர் மணக்கோலத்துடன் இருக்கிறார்கள். முருகவேளின் மேற்கு நோக்கிய சந்நிதியும், யானை வாகன இலடசண்மும் சிறப்புடையன. சங்கிலிக்கோவை முதலியன விசேட படைப்புக்கள்.

திருப்புத்தூரில் இருந்து 20 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

பாண்டிநாடு : 5