திருவல்லம்

இறைவர் : வல்லநாதேசுவரர்
இறைவி : வல்லாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வில்வம்

பெரிய கோயில். மாடக்கோயில். பொன்னை (நீவா) ஆற்றின் கரையில் இருக்கிறது. நவக்கிரகங்களும் வல்லாள மன்னனும் வழிபட்டு பேறு பெற்ற திருவூர். தீக்காலி என்னும் அவுணன் வழிபட்ட தலமாதலின், “தீக்காலி வல்லம்” எனவும் இவ்வூர் வழங்கப்பெறும். பெரிய அளவிலுள்ள நந்தி, நின்ற நிலையில் கிழக்கு நோக்கி இருக்கிறார். இத்தலத்தில் சிவானந்த மௌனசுவாமி என்பவர் மக்களுக்கு வில்வமும், திருநீறும் கொடுத்து, அவர்களுடைய நோய்களைக் குணமாக்கி, அவர்கள் வழங்கிய பொருளைக்கொண்டு கோயிலில் பாரியளவில் திருப்பணிகள் பல செய்து, திருக்குடமுழுக்கும் நிறைவேற்றினார்.

அரக்கோணம்-காட்பாடி இருப்புப்பாதையில் திருவலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 3 கி.மீ. பயண வசதிகள் உண்டு

தொண்டைநாடு : 10