திருப்பட்டீச்சரம்

இறைவர் : பட்டீச்சுரநாதர், தேனுபுரீசுவரர்
இறைவி : பால்வளை நாயகி, ஞானாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வன்னி

பெரிய கோயில். நாலு திக்கிலும் நாலு கோபுரங்கள். ஞானவாவி என்னும் தீர்த்தக்குளம் கிழக்குக் கோபுரத்தை அண்டி உள்ளே இருக்கிறது. காமதேனுவின் மக்கள் நால்வரும் பட்டி என்பவள் பூசித்த திருவூர். சிவபெருமான் சம்பந்தருக்கு முத்துப் பந்தர் அளித்த திருவூர். அவ்விழா ஆனி மீ 12 நிகழுகிறது. சுவாமி சந்நிதிக்கு நேரே உள்ள நந்திகள் சம்பந்தர் சுவாமி தரிசனம் செய்வதற்காக வழிவிட்டு விலகி இருக்கின்றன (திருப்பூந்துருத்தியில் போல்). பசு இலிங்கத்தின் மேல் பொழிகின்றது. அச்சுத நாயக்கர், அவருடைய அமைச்சர் கோவிந்தப்ப தீஷிதர் செய்த திருப்பணிகள் பல. இவ்விருவர்களுடைய திருவுருவங்களும், தீஷிதர் மனைவி திருவுருவமும் அம்பாள் கோயிலில் உள்ளன. வடக்குக் கோபுரத்தை அண்டி உள்ளே துர்க்கை அம்மன் கோயில் சிறப்புடன் விளங்குகிறது. திருச்சத்திமுற்றம் அருகிலே, சாலைக்கு வடக்கிலே உண்டு.

மயிலாடுதுறை-தஞ்சாவூர் மார்க்கம், தாராசுரம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கி.மீ. ரயில், பேருந்துகளில் செல்ல கி.மீ. வேறு பல வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 23