திருஈங்கோய்மலை (திருவிங்கநாதமலை)

இறைவர் : மரகதாசலர், ஈங்கோய்நாதர்
இறைவி : மரகதவல்லி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : காவிரி

அளவான கோயில். காவிரியின் வடகரையில் மலைமேல் இருக்கிறது. 118 படிகள் ஏறவேண்டும். ஈழசித்தமலை எனவும் படும். மூலலிங்கம் மருகததில் ஆயது. காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என இந்த வரிசையில் வணங்குதல் பெரும் புண்ணியம். இங்கு கார்த்திகைச் சோமவாரம் மிகச் சிறப்பு. (கடம்பர் – கடம்பந்துறை ஈஸ்வரர், சொக்கர் – சிவாயமலை திருவாட்போக்கி)

திருச்சிராப்பள்ளியில் இருந்து குளித்தலை வழி. இங்கிருந்து திருஈங்கோய்மலை 5 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 63