திருநாவலூர் (நாமநல்லூர்)

இறைவர் : திருநாவலேசுவரர், பக்தஜனேசுவரர்
இறைவி : சுந்தரநாயகியம்மை, மனோன்மணியம்மை

பதிகம் : சுந்தரர் 1
தீர்த்தம் : கெடிலம், கோமுகி என்னும் சிற்றோடை
தலமரம் : நாவல்

அளவான கோயில். சுந்தரரின் பெற்றோர் சடையனாரும், இசைஞானியாரும் வாழ்ந்து, சுந்தரரைப் பெற்று, பேறு பெற்றவர்கள். நரசிங்க முனையரையர் ஆண்டு, சுந்தரரை வளர்ப்பு மகனாக, தம் அரண்மனையில் வளர்த்து மகிழ்ந்தவர். கோயிலில் சுந்தரரின் பெற்றோர், முனையரையர், சுந்தரர் துணைவியர் மூவர் விழாத் திருமேனிகள் மிக அழகாக உள்ளன. கெடிலநதி அருகே பாய்கிறது.

விழுப்புரம்-சிதம்பரம் மார்க்கம், பரிக்கல் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ. பண்ருட்டி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 16 கி.மீ. பேருந்து பயண வசதிகள் பல உண்டு. வழியில் திருநாவுக்கரசு நாயனார் அவதரித்த திருவாமூர் உண்டு.

நடுநாடு : 8