திருஆவூர்ப்பசுபதியீச்சரம்

இறைவர் : பசுபதிநாதர்
இறைவி : மங்களநாயகி, பங்கயவல்லி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : பிரம தீர்த்தம்

சிறிய மாடக் கோயில். கட்டு மலைமேல் இருக்கிறது. மேற்கு பார்த்த சந்நிதி. 5 நிலை இராச கோபுரம். செங்கல்லில் ஆகிய பெரிய மதில். தளவரிசை உண்டு. இறைவியார் இருவர். மங்களநாயகி, பங்கயவல்லி. ஆவூர் தலப் பெயர்; பசுபதியீச்சரம் கோயிலின் பெயர். பசுக்கள் பூசித்தமையால் இப்பெயர் உண்டாயிற்று. தக்ஷிணாமூர்த்தி அழகாக எழுந்தருளி உள்ளார்.

மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் 15 கி.மீ. வழியில் 6 கி.மீ. பட்டீச்சரமும், திருச்சத்திமுத்தமும் உள. பயண வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 21