திருஉசாத்தானம் (கோயிலூர்)

இறைவர் : மந்திரபுரீசர்
இறைவி : பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1

கோயில் பெரிது. 5 நிலை இராச கோபுரமும் உயரமானது. திருமாளிகைச் சுற்றுக்கள் கருங்கல்லால் ஆனவை. இராம-இலட்சுமணர் இலங்கைக்குப் போகுமுன்னர், சிவபெருமானிடம் உபதேசம் பெற்றனர். அதனால் இப்பெயர் உண்டாயிற்று. இராமர் தம்மைச் சேர்ந்த பலருடைய கருத்துகளை உசாவின படியாலும் உசாத்தானம் ஆயிற்று. காக்ஷிகொடுத்த நாதர் எழுந்தருளி இருக்கின்றார். கோபுர வாயிலில் அதிகார நந்தி இருக்கிறார். இத்தலம் முன்பு மாமரக் காடாய் இருந்தமையால் சூதவனம் என்ற பெயரும் பெற்றுள்ளது. விநாயகருக்கு சூதவன விநாயகர் என்று பெயர்.

திருவாரூர்-அறந்தாங்கி மார்க்கத்தில், முத்துப்பேட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கோயில் கி.மீ கால் நடையாக செல்ல வேண்டும். முத்துப்பேட்டைக்கு ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 107